துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப்.2 திருச்சி மாநகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி மாநகரம் கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோ ஆதரித்து சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மருந்துக்கடை மோகன், முன்னிலையில், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில், NSB ரோடு, தெப்பகுளம், அருணாசலம்சிலை, ராமகிருஷ்ணா பாலம்கீழ்பகுதி, ஜீவாநகர், நத்தர்ஷா பள்ளிவாசல், சோபிஸ் கார்னர், V.N.நகர், குடமுருட்டி, செக்போஸ்ட், பழைய கரூர் ரோடு, அண்ணாசிலை ரவுண்டானா, கோரி மேட்டுத்தெரு, பூசாரித் தெரு நுழைவாயில், வெனிஸ்தெரு, ஆண்டாள்தெரு, வாணப்பட்டறை கோவில், E.B.ரோடு,
மகாராணி தியேட்டர் ரோடு, தேவதானம் ரயில்வே கேட், கீழ தேவதானம் ரோடு, சஞ்சீவி நகர் பிள்ளையார்கோவில் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர்கள் சரவணன், செல்வன், இளங்கோ உதயரபிக், ராஜா, முபாரக், சிவகுமார், ஜெயச்சந்திரன், சங்கர்,எம் ஆர் சி சந்திரன், சண்முகம், மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழகத் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .