திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்கு சேகரிப்பு

0 205
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், நேற்று  திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி. ப.குமார் தலைமையில்,  பனையக்குறிச்சி, வேங்கூர், அரசங்குடி, துவாக்குடி, காட்டூர் உள்ளிட்ட 45 பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு, மேல தாளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அமைப்பு செயலாளர்கள் S.வளர்மதி, T.ரத்தினவேல், R.மனோகரன், திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், அணிச் செயலாளர்கள் கார்த்திகேயன், முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.கே.டி கார்த்திக், எஸ்.எஸ்.ராவணன், மாவட்ட கழக துணை செயலாளர் சுபத்ரா தேவி, துவாகுடி நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் P.முத்துக்குமார், அரசு வழக்கறிஞர்கள் சின்னதுரை, சம்பத்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.P.கணேசன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் S.பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜமணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.