திருச்சிமாநகராட்சி 65-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, செப். 9 திருச்சி மாநகராட்சி வார்டு எண் 50 மற்றும் 65 இல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்குத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2 வார்டு எண் 50 உட்டப்பட்ட பகுதி மக்களுக்கு மண்டலம் 2 பழைய அலுவலகத்திலும், மண்டலம் 4 வார்டு எண் 65 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விமான நிலையம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளைப் பயனாளிகளிடம் வழங்கினார். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகர செயலாளர், மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மண்டலம் இரண்டின் தலைவர் ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர் ரிஸ்வான பானு, திருச்சி கோட்டாட்சியர் அருள், வட்டாட்சியர் விக்னேஷ், துணை வட்டாட்சியர் கார்த்திகேயன், இணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி பொறியாளர் பக்ரூதீன் பகுதி செயலாளர்கள் ராஜ் முகமது, மணிவேல், வட்ட செயலாளர் சீனிவாசன், ஞானசேகர், பன்னீர், சேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.