பெல் தொ.மு.ச. உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் : அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 135
Stalin trichy visit

திருச்சி, டிச.13  தமிழக முதல்வர் அறிமுகப்படுத்திய  ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தை பெல் தொமுச குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் பாய்லர் ஆலை தொமுச தொழிற்சங்கத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் மேலும் இந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நலன் பெறும் வகையில் பெல் பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாய்லர் ஆலை ஊழியர்களுக்காக செயல்படும் மருத்துவமனையில் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நிலையில் பெல் தொ.மு.ச மருத்துவக் குழு உறுப்பினர்கள் அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதுடன் அவர்களின் உடல் நலன் கருதி பெல் தொமுசா என்றும் நம்மோடு என்னும் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து பெட்டகமான பேரிச்சம்பழம், குளுக்கோஸ், பிஸ்கட் ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை கடந்த 9-11-25 அன்று தமிழ்நாடு முதல்வர் திருச்சியில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்

மேலும் இதனையடுத்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெல் பாய்லர் ஆலை மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார்

மேலும் இந்த அறிமுக விழாவில் பெல் தொமுசபொதுச் செயலாளர் தீபன் பெல் பாய்லர் ஆலை பொது மேலாளர் மருத்துவம் ரவீந்திரன், தலைமை மருத்துவர் சங்கர், மற்றும் தொமுச மருத்துவ குழு உறுப்பினர்களான தாமோதரன், பூபதி, வினோத்குமார், செல்வராஜ் உட்பட பெல் தொமுசா நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.