முசிறி நகராட்சியில் எஸ்.ஐ.ஆர். பணிகள் : மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
திருச்சி, நவ.18 முசிறி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் எஸ் ஐ ஆர் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கள ஆய்வு மேற்கொண்டார்,
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெற்று வருகிறது, வார்டு பகுதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பெற்று மனுக்களை முசிறி நகராட்சியில் பதிஏற்றம் செய்யப்பட்டு வருகிறது, இப்பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பணிகள் குறித்து விசாரித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். விரைவில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
உடன் முசிறி சார்- ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, நகராட்சி, முசிறி தேர்தல் வட்டாட்சியர் சரவணன், ஆணையர் சண்முகம், நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், மற்றும் பலர் உடன் இருந்தனர்