துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் அன்பில்மகேஸ் வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப். 10 திருச்சி பாலக்கரை பகுதியில் துரை வைகோவை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு !
திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரம், கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோ ஆதரித்து மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் டி.பி.எஸ்.எஸ்.ராஜுமுகமது முன்னிலையில் பாலக்கரை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
பாலக்கரை ரவுண்டானா, ஜெயில் பேட்டை, குப்பாங்குளம் மேம்பாலம், சூசையப்பர் கோவில், உப்புபாறை, முஸ்லீம் தெரு, சகாயமாதா கோவில், V.M பேட்டை வளைவு, பஜனை கூடத்தெரு, தர்மநாதபுரம்,மல்லிகைபுரம் மெயின் ரோடு, துரைசாமிபுரம், நாகநாதர் டீஸ்டால், தனமணி காலனி,கோவிந்த கோனார் தெரு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரசமரம், கீழப்புதூர் நாகநாதர் டீ கடை காளியம்மன் கோவில், எடத்தெரு விறகு மந்தை வழி, ரெங்கசாமி பூங்கா, புதுத்தெரு,சபரி ஆஸ்பத்திரி சந்து, மோட்சராக்கினி கோவில், கெம்ஸ்டவுன்,சந்தியாகப்பர் பாளையம் வழி, செங்குளம் காலனி காவேரி திரைஅரங்கம், உடையான்தோட்டம், பருப்புகாரத்தெரு மெயின்ரோடு எடத்தெரு அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனர் .
இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர்கள் சேகர், நலங்கிள்ளி, சுரேஷ், தனுஸ்கோடி, சில்வியா, கருணாநிதி, கோவிந்தராஜ், எடிட்டன், ஞனசேகர், சீனிவாசன், மற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில்
மகளிர் உரிமைச் தொகை வழங்கும் திட்டம், உயர்கல்வி பயிழும் மாணவிகளுக்கு புதுமைப் பெண்கள் திட்டம், இலவச பேருந்து பயணம் தந்த விடியல் பயணம் என பல்வேறு திட்டங்களை தந்த நமது முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும், வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றவுடன் சுங்கச்சாவடிகள் அகற்றப்படவும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் பெறவும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் விலை பாதியாக குறைக்கவும் நீட் தேர்வில் இருந்து நம் குழந்தைகள் விலக்கு பெற்றிடவும் இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.