திருச்சி மாநகராட்சி 22-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, செப்.5 திருச்சி மாநகராட்சி 22-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 22 வடவூர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 2.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பி வி சி தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், நகர பொறியாளர் திரு. சிவபாதம், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.