முதல்வர் படைப்பகம் கட்டிடத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

0 266
Stalin trichy visit

திருச்சி, செப்.5   திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 9 உறையூர் மருத்துவமனை பகுதியில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ. 305 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  கே.என். நேரு  இன்று  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன்,  மேயர்மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் , நகர பொறியாளர்  சிவபாதம், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.