1 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு

0 229
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

அதில் திருச்சி மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கூனிபஜார் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

அதே போல் 52 வது வார்டு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 15.70 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியையும், பொதுநிதியின் கீழ் ரூபாய் 9.90 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பிராட்டியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் திருச்சி மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 25.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொதுக் கழிப்பிட கட்டிடத்தையும், மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 38.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையம் கட்டிடத்தையும், ரூபாய்15.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 2.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல் சமத், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டல குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.