காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

0 264
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறியில் காணாமல் போன செல்போன்கள், சைபர் கிரைம் போலீசார் மூலம் அவ்வப்போது மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு 2021 .22 ஆம் ஆண்டுகளில் செல்போன்கள் தொலைந்து போன புகாரின் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரின் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் செல்போன் வழக்குகளை விரைந்து முடிக்க தனிப்படை காவலர் சூர்யாவை அமைத்தனர்.

இவர் சைபர் கிரைம் வாயிலாக புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், பெரம்பலூர் ,திருச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட விசாரணையில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு உள்ள 12 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை முசிறி காவல் நிலையத்தில் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் உரிமையாளர்களை வரவழைத்து செல்போனை வழங்கினார். இந்நிகழ்வில் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்தையன், உதவி ஆய்வாளர்கள் திருப்பதி, கருணாநிதி, பயிற்சி ஆய்வாளர் கோமதி ஆகியோர் உட்பட செல்போனை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் காவலர் சூர்யாவை வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.