திருச்சியில் பறவைகள் பூங்கா அமைப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, மே 9 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் பறவைகள் பூங்கா அமைப்பது குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.