அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையால் பரபரப்பு

0 356
Stalin trichy visit

திருச்சி, ஏப்.7  அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையால் பரபரப்பு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னையில் நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் திருச்சி தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் மூன்று கார்களில் வந்த அமலாக்க துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் இருந்து வந்த அமலாக்குத்துறை உயர் அதிகாரி இருவர் தலைமையில், திருச்சி அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் திருச்சி தில்லைநகர் பத்தாவது குறுக்கு தெருவில், மறைந்த ராமஜெயம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் வந்து ஆறு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

தற்போது தில்லைநகர் பகுதியில் அமைச்சர் நேருவின் ஆதரவலர்கள் திரண்டு வருவதால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.