வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி அவர்களின் 152- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…
இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன்,
பழனியாண்டி, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பி எம் ஆனந்த்,வெள்ளாளர் முன்னேற்ற சங்க கழக தலைவர் ஹரிஹரன்
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்…