நூறு சதவீதம் உரமானியத்தில் குறுவை சாகுபடித் தொகுப்பினை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி எல்.அபிஷேகபுரத்தில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் உரமானியத்தில் குறுவை சாகுபடித் தொகுப்பினை மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று (25.6.22) வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,, இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் .தி.ராமச்சந்திரன், மாவட்டப் பிரமுகர்க.வைரமணி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.