சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மத்திய அரசின் இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்

0 351
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அரசின் இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மத்திய அரசின் இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி வரவேற்பு அளித்தார். பின்னர் ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்ற மத்திய அமைச்சர் கொடி மரத்தை வணங்கிவிட்டு பின்னர் மூலஸ்தானம் சென்றார். அங்கு மாரியம்மனை பயபக்தியுடன் வணங்கினார்.இதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்வில் ஆணையர் கல்யாணி, கோயில் பணியாளர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.