திருச்சி மெயில் செய்திகளை சுட்டிக்காட்டி அரசு அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் உதயநிதி
திருச்சி, ஆக. 2 இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளை கள ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நேற்று மாலை (ஆக.1) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டத்தில் பங்கேற்று அரசின் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களின் புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது ஆங்கில நாளிதழில் வந்த செய்திகள் மற்றும் திருச்சி மெயில் இன்ஸ்டா-வில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்குவது குறித்து சிறப்பு பேட்டி வெளியிட்டப்பட்டது. திருச்சி மெயில் இணையதள செய்தியில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி லால்குடி அருகே தச்சங்குறிச்சி ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மணப்பாறை அருகே குடிநீர் உடைந்தது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். இதற்கு மாவட்ட அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பதிலளித்தனர்.
பொதுமக்களின் பிரச்சனையை திருச்சி மெயில் வெளியிட்டதை சுட்டிகாட்டி மாவட்ட அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு அலுவலர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். தாங்கள் செய்யும் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன என்பதையும் அமைச்சர் அரசு அதிகாரிகளுக்கு உணர்த்தியுள்ளார்.
சிறிய செய்தி நிறுவனமாக இருந்தாலும், பெயரை சொல்லி ஊக்கப்படுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருச்சி மெயில் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.