திருச்சி பெல் நிறுவனத்திற்கு ரூ. 43 ஆயிரம் கோடி ஆர்டர்கள் : பாஜக மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி

0 225
Stalin trichy visit

திருச்சி பெல் நிறுவனத்திற்கு ரூபாய் 43 ஆயிரம் கோடி ஆர்டர்கள் கிடைத்துள்ளது – பாஜக மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி பேட்டி:-

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில் 2024 – 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார் மாவட்ட பொதுச் செயலாளர் ஒண்டி முத்து காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி தொழில் பிரிவு மாநில பார்வையாளர் அசோக் சுந்தரேசன் ஆகியோர் கலந்துகொண்டு பட்ஜெட் குறித்து விளக்கி பேசினார்.

அதனைத் தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் கனக சபாபதி

நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூபாய் பத்து லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரியை பயன்படுத்தி பாயிலர்களை சுற்றுச்சூழல் மாசில்லாமல் தயாரிப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜுலை வரை ஏழு மாதங்களில் திருச்சி பெல் நிறுவனத்துக்கு ரூபாய் 43 ஆயிரம் கோடி ஆர்டர்கள் கிடைத்துள்ளது அடுத்த ஏழு ஆண்டுகளில் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் திருச்சியில் மீண்டும் சிறு குரு தொழில்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் நிலையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.