உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஆகாய தாமரையை அகற்ற எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உத்தரவு
திருச்சி, அக். 30 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட உய்யக்கொண்டான் கால்வாயில் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உத்தரவின் பேரில் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில் அதற்கான முதற்கட்ட பணியானது துவங்கப்பட்டது அதனை துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மேலும் கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வரகனேரி எடத்தெரு மற்றும் பாலக்கரை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆகாய தாமரையை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடன் துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா , மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பகுதி கழக செயலாளர்,வட்டக் கழக செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.