மாநில அளவிலான கராத்தே போட்டி
திருச்சி, அக். 30 திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் அருகே ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிற்கு தலைமை பயிற்சியாளர் கராத்தே சங்கர் தலைமை ஏற்றார்.
ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகா, அசாம் ,கோவா, பாண்டிச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட கராத்தே வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த போட்டியானது கட்டா,குமிட்டே என்ற அடிப்படையில் 175 பிரிவுகளில் கீழ் நடைபெற்றது. காலை முதல் மாலை வரைபடப்பாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு சேர்ந்த அணியினர் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். மேலும் இந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு SKWF- னால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள், வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் அயல்நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்புகளை சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டன. இந்த போட்டியில் ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் தலைமை நடுவர் பத்மா செய்தியாளர்களிடம் பேசுகையில்…. நான் ஒரு பெண்ணாக உள்ளேன். பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தற்காப்பு கலைமான கராத்தே கலையை அனைவரும் கற்று கொள்ள வேண்டும் . பெண்கள் தற்காப்பு கலையை கற்பதால் சமூகத்தில் பாதுகாப்பு ஏற்படுகின்றது.
கராத்தே தற்காப்பு கலையாக இல்லாமல் உயிர் காக்கும் கலையாக உள்ளது.. உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. கராத்தே கலை கற்று கொள்வதால் உடல் ஆரோக்கியம், மன வலிமை , எந்த ஆற்றலையும் தானே எதிர்கொள்ளும் மன ஆற்றல் ஏற்படும். குறிப்பாக குழந்தைகள் கராத்தே கற்று கொள்வதால் படிப்பை கவனம் செலுத்தவும், ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே அனைவரும் கராத்தே கலையை கற்று கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வீராங்கனை லீனா பேசுகையில்.. நான் பல ஆண்டுகளாக கராத்தே கலையை கற்று வருகிறேன்.பல மாவட்ட மாநில அளவிலான , சர்வதேச, தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை, வெற்றி கோப்பை , பதக்கங்களை பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.
மேலும் அயல்நாடுகளில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்கும் தமிழக கராத்தே வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கராத்தே பயிற்சியாளர் சங்கர் தெரிவித்தார்.