மணப்பாறையில் மோகன்தாஸ் யோகா மையத்தின் கின்னஸ் உலக சாதனை
திருச்சி, ஜூலை 10 திருச்சி மாவட்டம், மணப்பாறை மோகன்தாஸ் யோகா மையத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்கிளப் செயலாளர் பிரவீன் குமார் வரவேற்புரையாற்றினார். கல்வியாளர் முன்னாள் லயன்ஸ் ஆளுநர் லயன்ஸ் ராஜரத்தினம் தலைமை வகித்தார். பெருமாள் கவுரவித்தும், சந்திரசேகரன் மிஸ்டரி ஆப் ஆயுஷ், நேசனல் யோக டிரைனர் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து யோகா குரு மோகன்தாஸ் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள், 40 வினாடிகளில் யோக செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. யோகா குரு மோகன்தாஸ் பழைய சாதனையை முறியடித்து உலகசதனை 1:19:41 மணிக்கு முடித்து சாதனை படைத்துள்ளார்

இந்நிகழ்ச்சியை லயன் கிளப் ஆப் மணப்பாறை, ஜே.சி.மணப்பாறை டவுன் இணைந்து ஒருங்கிணைந்து நடத்தினர். நிறைவாக ஜே.சி. மணப்பாறை டவுன் தலைவர் மதி நன்றி கூறினார்.