எடமலைப்பட்டி புதூரில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
திருச்சி ஆக11 -திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி இரண்டாவது கிராஸ் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குகன் சுந்தர் (வயது 29)இருந்து வருகிறார். இவர் வழக்கம் போல் இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார் பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கோவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது இது குறித்து குகன்சுந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்