பூசாரி மனைவியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி ஆக.11 திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்
இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரி ஆக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உறையூர் கீழ கல் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடி அப்பாஸ் என்கிற பாலகுமார்(29) என்பவர் குடிபோதையில் கோவிலுக்கு சென்றார்.
இதைக் கண்டு மணிமாறன் அவரை கண்டித்தார்.
இந்த முன் விரோதத்தில் அங்கே நின்று கொண்டிருந்த மணிமாறனின் மனைவி ஆனந்த நித்யாவை ரவுடி தாக்கியதாக கூறப்படுகிறது இது பற்றி அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி அப்பா சை உறையூர் போலீசார் கைது செய்தனர்.