அரசுப் பள்ளியில் நிலா திருவிழா
திருச்சி, ஜூலை 10 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி திருச்சி அஸ்ட்ரோ கிளப் இணைந்து நிலா திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். நிலா திருவிழா என்னும் நிகழ்ச்சியில் நிலாவின் தோற்றம் மேடு பள்ளங்கள், செவ்வாய் கிரகம் சர்வதேச விண்வெளி மையம் ஆகியன உற்று நோக்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ராஜஸ்ரீ நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி பேராசிரியர் முனைவர் ரமேஷ் நிகழ்ச்சியை சிறப்புரச் செய்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமாவளவன், மோகன்ராஜ், முத்தமிழ்செல்வன், ஆறுமுகம் ரமேஷ் குமார், துரைப்பாண்டியன், பால்ராஜ் ஹென்றி சாண்டி சாமுவேல், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் விழாவில் 1000 மேலான மாணவர்களும் 200கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.