லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

0 279
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து நேற்றிரவு ஒரு லாரி மணல் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த பாலாஜி 48) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. பேருந்தை காஞ்சீபுரத்தை சேர்ந்த சுந்தர்சிங் (50) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் அருகே சிறுகனூர் மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக அரசு விரைவு பேருந்து மோதியது. இதில் ஓட்டுநர் உட்பட பயணிகள் என 10க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இருங்களூரில் உள்ள ஒருதனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிறுகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, வாகனங்கள் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.