திருநங்கைக்கு பாலியல் தொல்லை – சிறைக் காவலர் பணியிடை நீக்கம்

0 362
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 திருச்சி அரியமங்கலத்தைச் சேந்தவர் சாரங்கன் (32). திருநங்கையான இவர், திருட்டு வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் பாதுகாப்புப் பணியிலிருந்த சிறைக்காவலர் மாரீஸ்வரன் (41) என்பவா, சாரங்கனுக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குரைஞர் மூலம் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் திருநங்கை சாரங்கன் அளித்தார். இதையடுத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞர் சிறையிலிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போத போது திருநங்கை இருக்கும் பகுதியில் காவல் மாரீஸ்வரன் சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருநங்கை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி. ஐ. ஜி. , ஜெயபாரதி ஆகியோ காத்திருப்போர் பட்டியலுக்கும், பின்னர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.
துறை ரீதியிலான விசாரணையின் அடிப்படையில், திருநங்கைக்கு சிறைக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்த சிறைக்காவலர் மாரீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து, சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா தயாள் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.