விடுதியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

0 316
Stalin trichy visit

திருச்சி ஏப் 28 திருச்சி ஏர்போர்ட் சத்யா நகரில் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஊழியராக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சுதாகர் 1வது மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார் இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.