எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப். 24 வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறாக பேசிய எம். பி. ஆ ராசாவை கண்டித்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைந்து நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய நீதி கட்சி மற்றும் வ. உ. சி. பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வ .உ. சி. பேரவை நிறுவனர் ஆனந்த் சத்ரிய மற்றும் புதிய நீதி கட்சி இணைச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமானார் கலந்து கொண்டு ஆ ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.