பெற்றோருக்கு பாத பூஜை செய்த பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள்
திருச்சி,பிப்.24 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ – மாணவிகளின் பெற்றோரை ஆசிரியர்கள் அழைத்துச் சென்று வரிசைப் படுத்தினர். குழந்தைகளின் பெற்றோர், இல்லாவிடில் அந்த குடும்பத்தில் உள்ள அண்ணன் அக்கா இதுபோன்று வந்திருந்தவர்களை நிற்க வைத்து அவர்களுக்கு மாணவ, மாணவிகள் பாதபூஜை செய்யும் நிகழ்வு தொடங்கியது. இதற்கு தேவையான பொருட்களை பள்ளி நிர்வாகத்தினர் வாங்கி தயார் நிலையில் வைத்திருந்தனர். மாணவ – மாணவிகள் தங்கள் பெற்றோர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்து பெற்றோர்களின் பாதங்களுக்கு திலமிட்டு அவர்களின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் பொதுத் தேர்வில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி திலகமிட்டு மலர் தூவியும் மகிழ்ந்தனர்.