கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, ஜூலை 23 திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அரசலூர், மல்லிகை நகரைச் சேர்ந்த லூர்து வசந்தன் (30) குடும்பத்திற்கும், அரசலூர், தெற்கு தெருவை சேர்ந்த விஜயராகவன் (37) குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் , கடந்த 2018, நவ.6 ஆம் தேதி அரசலூர் தெற்கு தெரு வழியாக மேற்படி லூர்து வசந்தன், அவரது அக்கா ஹேமா மற்றும் சகோதரர் விமல் @ விமல் லாரன்ஸ் (24) ஆகியோர் நடந்து சென்றபோது, மேற்படி விமல் @ விமல் லாரன்ஸை விஜயராகவன் (37), வளர்மதி (63) வசந்தகுமார் (49) ஆகியோர் இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக லூர்து வசந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில், தொட்டியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகினார். இந்நிலையில் இன்று (திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் விமல் @ விமல் லாரன்ஸை கொலை செய்த குற்றவாளிகள் விஜயராகவன், வசந்தகுமார் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும், வளர்மதி-யை 63/25 வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் தொட்டியம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் வளர்மதி ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.