உங்களுடன்‌ ஸ்டாலின் திட்ட முகாமில் திரண்ட பொதுமக்கள்

0 263
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  மணப்பாறை அருகே உங்களுடன்‌ ஸ்டாலின் திட்ட முகாமில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திரண்ட மக்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டவர்கோவிலில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான‌ உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. கலிங்கப்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.‌ பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற எம்எல்ஏ பின்னர் மனுக்கள் குறித்து நடவடிக்கைகளுக்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

அனைத்து திட்டங்களும் மக்களுக்ககு சென்றடைய வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் குறிக்கோள். 15 துறை அதிகாரிகளையும் ஒருங்கே வரவைத்து மக்களின் பிரச்சினைகளை அவர்கள் இடத்திற்கே சென்று தீர்த்துவைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து முகாமில் பங்கேற்றுள்ள பல்வேறு துறை அதிகாரிகளையும் சந்தித்து முகாம் குறித்து கேட்டறிந்து மக்களின் மனுக்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.

பின்னர் முகாமில் மனு அளித்து தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவு நகலையும் வழங்கினார். இதில் வருவாய்த்துறை, கூட்டுறவுத் துறை, சுகாதாரம், மின்வாரியத்துறை, காவல்துறை, வேளாண்மைத்துறை, சமூகநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்‌ பங்கேற்று தங்கள் துறை சார்ந்த பொதுமக்களின் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதில்மணப்பாறை வட்டாட்சியர் செல்வம்‌, மணப்பாறை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேந்திரன், கார்த்திக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தொப்பாநாயக்கன்பட்டியிலும், மருங்கபுரி ஊராட்சி ஒன்றியத்தில் பாலக்குறிச்சியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.