கல்லூரி வளாகத்தில் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

0 189
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்  ஹரிஸ் (20) .இவர் சமயபுரம் சுக்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இலையில் நேற்று கல்லூரிக்குச் சென்ற மாணவர் கல்லூரி வளகத்தில் தனது மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு வகுப்பறைக்கு சென்றார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது. மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர் இதனால் ஹரிஷ் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஹரிஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.