ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 187
Stalin trichy visit

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

ரயில்வே தொழிலாளர்களின்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 17 ரயில்வே ஊழியர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் சார்பில்  திருச்சி ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரயில்வே தனியார் மயக் கொள்கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் சார்பில்
திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார்.

இந்த செவ்வணக்க நிகழ்வு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வந்த நிலையில் தற்போது, மத்திய அரசு உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் வழங்குவதாக அறிவித்துள்ளது. வரும் காலங்களில் அதனையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எஸ்.ஆர்.எம்.யூ மேற்கொள்ளும் என தொழிற்சங்கத் தலைவர் ராஜா ஶ்ரீதர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.