சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு : உறவினர்கள் மறியல்

0 389
Stalin trichy visit

திருச்சி, ஜன.27  மணப்பாறை அருகே சாலை விபத்தில் முதியவர் பலி. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் இதனால் ஒரு மணி மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம்
கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி – 65. மணியங்குறிச்சியில் விவசாய வேலைக்கு சென்று விட்டு மீண்டும் அவரது இருசக்கர வாகனத்தில் கம்பளியம்பட்டி நோக்கி புத்தாநத்தம் மணப்பாறை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் புத்தாநத்தம் அண்ணா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய நிலையில் சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச் சம்பவம் பற்றி தகவல் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி சாலை மறியல் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் முத்துச்சாமி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சின்னச்சாமி உறவினர்கள் சின்னச்சாமியை மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் உடலை எடுக்க விட மாட்டோம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விபத்தை ஏற்படுத்திய மருங்காபுரி வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் சரண்ராஜ்  (30)  என்பது தெரிய வந்தது இதனை அடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிராக்டரையும் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

சாலை மறியல் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனை அடுத்து புத்தாநத்தம் காவல்துறையினர் விபத்தில் பலியான சின்னச்சாமி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.