திருச்சி மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏதுவாக குடமுருட்டி உய்யகொண்டான் , கோரை ஆற்றின் கரைகளில் புதிய சாலைகள் – திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி

0 412
Stalin trichy visit

திருச்சி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதனை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இணைந்து பார்வையிட்டனர்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு :

திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மழை காலத்திற்கு முன்பாகவே புதிய சாலைகள் போடப்படும்.

திருச்சி மாநகர் பகுதிகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்ட வருகிறது – குறிப்பாக வயலூர் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது – இதனை தடுக்கும் வகையில் உய்யக்கொண்டான் வாய்க்கால்,கோரையாறு போன்ற வாய்க்கால்களின் கரைகளில் உள்ள சாலைகளை வலுப்படுத்தி மாற்று பாதையாக உருவாக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.