திருச்சி ரெயில் நிலையத்தில் புதிய ஸ்கேனிங் கருவி
திருச்சி, ஜூலை 17 திருச்சி ரெயில் நிலையத்தில் புதிய ஸ்கேனிங் கருவி
பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவு வாயில் பகுதி யில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய புதிதாக ஸ்கேனிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது.வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சேரா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி, ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரசாத் யாதவ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயணிகளின் உடைமைகளை துரிதமாகவும், பாதுகாப்பான முறையில் பரிசோதனை செய்யவும் இந்த புதிய கருவி பெரிதும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.