தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

0 539
Stalin trichy visit

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2005-ம் ஆண்டு முதல் உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத, வாய் பேச இயலாதோர், பார்வையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் அவரவர் முகவரிக்கு தனித்துவ அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள நபர்கள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற வருகிற 20-ந் தேதிக்குள் நேரடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரி செய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 0431-2412590-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.