என்.ஐ.டி. விடுதியில் பாலியல் தொல்லை : மாணவ, மாணவிகள் விடிய, விடிய போராட்டம்

0 523
Stalin trichy visit

திருச்சி, ஆக. 30  திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் விடுதி மாணவியிடம் காண்ட்ராக்ட் ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது சம்பந்தமாக என் ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் விடுதி வார்டனையும் கண்டித்தும் சக மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் தமிழகம்மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியை பயின்று வருகின்றனர்.

அப்படி பயின்று வரும் மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் கல்வியை கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் என் ஐ டி கல்லூரி மகளிர் விடுதியில் மின்சார பிரச்சனை குறித்து பழுது பார்ப்பதற்காக என் ஐ டி கல்லூரியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கும் முதுகுளத்தூரை சேர்ந்த காந்தி மகன் கதிரேசன் (38) என்பவன் சென்றுள்ளான் அப்பொழுது கல்லூரி விடுதியில் அறையில் மாணவி ஒருவர் படித்துக் கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அவரை தனியே பார்த்த கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டு கொண்டு வெளியே ஓடி வந்ததோடு இச்சம்பவம் குறித்து சக மாணவ மாணவிகளிடம் கூறியுள்ளார்.

மேலும் தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த அந்த மாணவியின் தந்தை நேரு இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை அதிரடியாக கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும் விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும்கண்டித்து கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட அவளும் கல்லூரி மாணவ மாணவிகளின் சமூக வலைதளங்களில் அதிரடியாக பரவியது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள்  மாணவிகளின் ஆடை குறித்து விமர்சித்த விடுதி காப்பாளரை கண்டித்தும் என்ஐடி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு மாணவர்கள்  விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மாணவ அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படா தொடர்ந்து முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி கோபால் சந்திரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவியரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அதையும் ஏற்காத மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள என் ஐ டி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடுதங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகிலா நேரில் வரவேண்டும் என கூறி முழக்கமிட்டு அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போலீசார் மாணவர்கள்போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம் என மிரட்டி பார்த்தனர் எதற்கும் அஞ்சாத மாணவர்கள் தொடர்ந்து விடிய விடிய அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், போராட்ட களத்திற்குச் சென்ற எஸ்.பி. வருண்குமார், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதனால் என் ஐடி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஐடி கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதி வார்டனுக்கு தெரியாமல் இரண்டு நாட்களாக வெளியில் சென்று தனது ஆண் நண்பருடன் சுற்றிவிட்டு வந்த பொழுது அந்த மாணவி அப்பகுதியில் சென்ற ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.