வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை : திருச்சி மாவட்ட எஸ்.பி
திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜீத் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல் துறையை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை, காவல் துறை தரப்பிலிருந்து சில வெளிமாநில தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்