தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக உதவியாளர் : விண்ணப்பிக்க அழைப்பு

0 229
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர் முன்னுரிமையற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இப்பணிகாலியிடத்திற்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இப்பணியிடத்திற்கு 01.07.2022 அன்றைய நிலையில் குறைந்தபட்ச வயது 18-ம், பொது பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும், பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தகுதியான மனுதாரர்கள் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். அதில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகின்ற 15.11.2022-க்குள் உதவி இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கண்டோன்மென்ட், திருச்சி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.11.2022, மாலை 5.45 மணி. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.