தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி தெற்கு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படிகடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வரிசாகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அண்ணனாகவும் வாழ்ந்து மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் சேகரன் வண்ணை அரங்கநாதன் கோவிந்தராஜன் செந்தில் பகுதிகழக செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம் ராஜ் முஹம்மது மணிவேல் மோகன் விஜயகுமார் சிவகுமார் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்