தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0 266
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி

சுயமரியாதைச் சுடரை தன் வாழ்நாளில் ஏந்திப்பிடித்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் சேகரன் வண்ணைஅரங்கநாதன் கோவிந்தராஜன் செந்தில் பகுதிகழக செயலாளர்கள் தர்மராஜ், நீலமேகம் ராஜ்முஹம்மது மணிவேல் மோகன் விஜயகுமார் சிவகுமார் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.