போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவிகளுக்கு ஒரு நாள் யோகா பயிற்சி

0 262
Stalin trichy visit

திருச்சி கே.கள்ளிக்குடியில் அமைந்துள்ள NR IAS ACADEMY யில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் மாணவிகளுக்கு ஒரு நாள் யோகா பயிற்சி வகுப்பானது சக்தி யோகாலயா நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை NR IAS ACADEMY யின் இயக்குனர் ஆர்.விஜயாலயன், சக்தியோகாலயா நிறுவனத்தின் நிறுவனர் இளையராஜா, ரெங்கசாமி தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் சக்தியோகாலயாவில் பணிபுரியும் மேலாளர்  சாயிரா பானுவரவேற்புரை வழங்கினார். அதனைத் தோடர்ந்து சக்தியோகாலயா நிறுவனர் திரு இளையராஜா ரெங்கசாமி அவர்கள் கலந்து கொண்டு, சக்தியோகாலயா நிறுவனத்தின் நோக்கம் பற்றியும் பயிற்றுவிக்கப்படும் யோகாவின் அணுகுமுறைப் பற்றியும் கூறினார். அதனைத் தொடர்ந்து திருச்சி NR IAS ACADEMY யின் இயக்குனர் ஆர். விஜயாலயன்  கலந்து கொண்டு யோகாவின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி கூறினார். அதனைத் தொடர்ந்து ரிதமிக் யோகா வகுப்பு நடைபெற்றது. இந்த ரிதமிக் யோகாவில் சக்தியோகாலயா நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த யோகா ஆசிரியர்  பெருமாள், யோகா ஆசிரியர் பரமேஸ்வரன் கலந்து கொண்டு வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து NR IAS ACADEMY யில் பயின்று வரும் மாணவிகளுக்கு யோகா பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்நிகழ்வில் சக்தியோகாலயா நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த யோகா ஆசிரியர்  பெருமாள் , யோகா ஆசிரியர் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகாவின் அவசியம் பற்றியும், மனதை அமைதி படுத்தும் ஆசனங்கள், மனதை ஒருநிலை படுத்தும் ஆசனங்கள், நினைவாற்றலை பெருக்க உதவும் ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சி வகுப்புகளும், இடது மூளை மற்றும் வலது மூளை சமன்படுத்தும் மன விளையாட்டு (Mind game) பயிற்சிகளும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வு மிகச் சிறப்பாக அமைய உதவி புரிந்த NR IAS ACADEMY யின் இயக்குனர்ஆர். விஜயாலயன் , அங்கு உதவி புரிந்த அனைத்து பணியாளர்களுக்கும், மாணவிகளுக்கும் சக்கி யோகாலயா குழுமத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.