திருச்சி மாநகரில் ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது – மாநகராட்சி ஆணையர்

0 339
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேனூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11 K.V துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 19.11.2022 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.

எனவே, மண்டலம்-1 மேலூர், தேவி ஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், T.V. கோவில், அம்மாமண்டபம், AIBEA நகர், தேவதானம், மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜ நகர் பழையது, காஜாமலை புதியது, மண்டலம் 3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, M.K. கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மை வீதி, M.K. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், மண்டலம் 4ஜேகே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், LIC புதியது, LIC பழையது, சுப்பிரமணிய நகர், தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, தென்றல் நகர் EB காலணி, வி.என். நகர் புதியது, வி.என். நகர் பழையது, சத்தியவாணி முத்து கேகே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவி பாரதி நகர், எடமலைப்பட்டி புதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, ரெங்கா நகர், மண்டலம் 5 மங்கலம் நகர், சிவா நகர்,உறையூர் புதியது, உறையூர்பழையது, பாத்திமாநகர்,ரெயின்போ நகர், செல்வாநகர்,ஆனந்தம் நகர்,பாரதி நகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய நீர்த் தேக்க தொட்டிகளுக்கு 19.11.2022 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது.

மறுநாள் 20.11.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.