சாலை விபத்தில் ஒருவர் பலி

0 302
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஊட்டத்தூர் நம்புக்குறிச்சி சாலையில் மோட்டார் பைக்கில் சென்றவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

லால்குடி அருகே நம்புக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் 54 வயதான தியாகராஜன். இவர் கடந்த 22 ம் தேதி தனது மோட்டார் பைக்கில் ஊட்டத்தூர் நம்புக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக மோட்டார் பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.