இருக்கும்போது மக்கள் சேவை – இறந்த பின் உடல் உறுப்பு தானம் – பிறந்த நாளில் அசத்திய திருச்சி விமானி!

0 417
voc

திருச்சி திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞர் அணியில் இருப்பவர் இவர். எத்தனையோ இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்பவர். கொரோனா காலகட்டம் முதல் பல்வேறு இக்கட்டான காலகட்டங்களிலும் உதவி புரிந்தவர். விமானியாக இருந்தாலும் சமுதாயத்திற்காக களத்தில் நின்று பணியாற்றுபவர். அதற்கும் ஒரு படி மேலாய் தற்போது உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இளம் விமானி E.அசோக்ராஜா. திமுகவின் இளைஞர் அணியில் தற்போது இருந்து வருகிறார். விஎஸ்பி ஹவுஸிங் குழும நிறுவனராகவும், அசோக்ராஜா பவுண்டேஷன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு பாலமாக செயல்பட்டு வருகிறார்.

national admission
click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

சமீபத்தில் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 3 லட்சம் மதிப்பிலான செறிவூட்டும் கருவிகளை வழங்கியது முதல் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தொடர்ந்து தெற்காசிய போட்டியில் விளையாட செல்லும் கல்லூரி மாணவர்களுக்கு தன்னுடைய பவுண்டேசன் சார்பாக உதவித்தொகையும் வழங்கினார். இப்படியாக இவரின் பணிகள் ஒருபுறம் சமுதாயத்திற்காக தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் இந்த தருணத்தில் தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

சென்னையில் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், தன்னுடைய பிறந்தநாளை மக்களுக்காக அர்ப்பணிக்கும் பொருட்டு இறந்த பின்னும் மக்கள் பணிக்காக தன்னுடைய உடல் உறுப்பை பிறந்தநாளன்று தானமாக செய்ய உறுதியளித்துள்ளார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…. https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!