வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்த திருச்சி பெண் காவலர்!
திருச்சி மாவட்டம் கடந்த 18ம் தேதி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் ரம்யா தனது அலுவலக பணியாக திருவெரும்பூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண் காவலர் செல்லும் வழியில் எஸ்.ஐ.டி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு முதியவர் வலிப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த பெண் காவலர் ரம்யா, அவருக்கு அருகில் இருந்த சமூக ஆர்வலர் ஷகிலா பானு உதவியுடன் மீட்டு அவருக்கு முதலுதவி செய்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறிது நேரம் கழித்து முதியவருக்கு நினைவு திரும்பிய பின் அவரைப் பற்றி விசாரிக்கையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கிறார்
என்பதை அறிந்த பெண் காவலர் அவரை திருச்சி கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தார். மேலும் அவரது புகைப்படம் மற்றும் அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அவர் யார் என அறிந்து உறவினரிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றார். அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை நேற்று பார்க்கச் சென்றபோது அவர் இரவில் தூங்கும் போது கொசு கடிப்பதினால் என்னால் தூங்க முடியவில்லை என்று அந்தப் பெண் காவலரிடம் கூறியிருக்கிறார்.
இதனை அறிந்த பெண் காவலர் மகள் போல் அவருக்கு உறுதுணையாக நின்று அவருக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். பெண் காவலரின் சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறார்.