2 பேர் கவலைக்கிடம் – 12 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை – திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு!

0 640
Stalin trichy visit

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களிடம் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், ‘3 வாரத்தில் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்’ என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால், விடுதலைக்கான எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், நிரூபன், முகுந்தன் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

இதில் எவ்வித தீர்வும் எட்டப்படாததால் விரக்தியடைந்த முகாம்வாசிகளில் இருவர், நேற்று முன்தினம் கத்தியால் தங்களது கழுத்து மற்றும் வயிற்றை கிழித்துக்கொண்டனர். மேலும், 12 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றனர். மொத்தம், 16 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை தமிழர்கள், உணவு உண்ண மறுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில், 10வது நாளாக முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இருவரின் உடல் நிலையையும் மருத்துவக் குழுவினர் இன்று சோதனை செய்தனர். அவர்களின் இருதயத் துடிப்பு, 50க்கும் கீழாக குறைந்த நிலையில், இருவரும் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் இருந்தது. நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரையும் மருத்துவக் குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டனர். அதையடுத்து, காவல்துறையின் உதவியுடன் இருவரும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு சென்றாலும், ‘விடுதலை அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் என்பதே தங்களது நிலைப்பாடு’ என்பதில் இருவரும் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில் , தற்போது சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள்
12 பேர் தூக்கமாத்திரை சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.