மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
திருச்சி,நவ. 8 திருச்சி எடமலைப்பட்டி புதூர் அமீனா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48) பெயிண்டர். இவர் எடமலைப் பட்டி புதூர் அண்ணா நகர் பகுதியில் ஒரு பில்டிங் முதல் தளத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் .
அப்பொழுது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.