பான்-இந்தியா சட்ட விழிப்புணர்வு முகாம்

0 392
Stalin trichy visit

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி, கடந்த அக்டோபர் 2-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை பான்-இந்தியா சட்ட விழிப்புணர்வு முகாம்கள் திருச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து அனைத்து அரசு துறைகளின் பங்களிப்புடன் கண்காட்சியும், புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமும் திருச்சி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஒய்.கிளாட்ஸ்டன் பிளசட் தாகூர் தலைமை தாங்கினார்.

செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) விவேகானந்தன் வரவேற்றார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து நீதிபதிகள், அனைத்து வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், ஆணைக்குழுவின் பட்டியல் வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஊழியர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.