மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் பயிற்சி!
பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் அகாபே சிறப்பு பள்ளி இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் பற்றிய பயிற்சியை திருச்சியில் உள்ள அனைத்து சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நடத்தியது. இதில் ஐனாஸ் சைவஸ் இந்தியாவின் தேசிய இயக்குனர் ஆரோன்

ரிச்சர்ட் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் சைவஸ் தமிழ்நாட்டின் இயக்குனர் டாக்டர்.பால் தேவசகாயம், அகாபே சிறப்பு பள்ளியின் தாளாளர் சாராள் ஆரோக்கிய மேரி, சமூக பணித்துறை பேராசிரியர் பியூலா நேச பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை சமூக பணித்துறை மாணவி திலகவதி ஒருங்கிணைத்து வழங்கினார்.